வளைகுடா பகுதியில் நிலவும் அமைதியின்மை! பெரும் அச்சத்தில் முதலீட்டாளர்கள்
வளைகுடா பகுதியில் நிலவும் அமைதியின்மையால் உலகளாவிய பணவீக்கம் உயரக்கூடும் என்ற அச்சத்தில் தங்கத்தின் விலை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை மேலும் உயர்த்தும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய கிழக்கில் அமைதி பேச்சுவார்த்தை
இந்த செய்தி வட்டி வருமானம் ஈட்டாத தங்கம் போன்ற உலோகங்களுக்கான தேவையை குறைத்துள்ளது.

அதன்படி, உலக சந்தையில் தங்கத்தின் உடனடி விலை 0.9 சதவீதம் சரிந்து, ஒரு அவுன்ஸுக்கு 4,049.90 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.
மேலும், ஆகஸ்ட் மாதத்திற்கான தங்கத்தின் விலை 0.8 சதவீதம் சரிந்து, ஒரு அவுன்ஸுக்கு 4,063.50 அமெரிக்க டொலராக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நடைபெறும் அமைதி பேச்சு வார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து முதலீட்டாளர்களிடையே நிலவும் நம்பிக்கையின்மையே தங்கத்தின் விலையை பாதித்துள்ளது என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam