4 இலட்சத்தை கடந்த சில மணிநேரங்களில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் - பதிவாகியுள்ள நிலவரம்
இலங்கையில் தங்கத்தின் விலையில் நண்பகலுக்குப் பின் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (02.04.2026) காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 403,000 ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது.
எனினும், நண்பகலின் பின்னர் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றுக்கு 4,000 ரூபாய் குறைவடைந்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 399000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 367,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
முதலாம் இணைப்பு
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டு 4780 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை நேற்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கம் 4695.96 டொலர்களாக பதிவாகியிருந்தது.
அத்துடன் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் அதிகரித்து 75.4 டொலராக பதிவாகியுள்ளது.
இலங்கை நிலவரம்
இதேவேளை இலங்கையில் இன்றைய தினம் (02.04.2026) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று ஒரு பவுண் தங்கத்தின் விலை 7000 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 403,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,350ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam