தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரிப்பு
நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(27.04.2023) தங்கத்தின் விலையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தங்க நிலவரம்
இதன்படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 644,001 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,720 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 181,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 166,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,830 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,880 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 159,050 ரூபாவாகவும் இன்யைதினம் பதிவாகியுள்ளது.
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam