தங்கத்தின் விலையில் இன்றும் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 580,751 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்

இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 163,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 150,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 143,450 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத விலை உயர்வு

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த சில நாட்களாக சடுதியாக உயர்வடைந்து வரும் நிலையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 18 மணி நேரம் முன்
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam