உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்ற இறக்கம் - ஏற்படவுள்ள மாற்றம்
உலக சந்தை தங்கத்தின் விலையில் விரைவான சரிவு ஏற்பட்டாலும், தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 15 ஆம் திகதி நிலவரத்திற்கமைய, உலக தங்கத்தின் விலையில் பாரிய சரிவு ஏற்பட்டிருந்தது.
இதனுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் தங்கச் சந்தையின் விலைகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அதன் உதவிப் பணிப்பாளர் இந்திக பண்டார தெரிவித்துள்ளார்.
தங்கத்தின் விலை
15ஆம் திகதியளவில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் வரி ஒப்பந்தம் செய்துக் கொள்ளப்பட்ட நிலையில் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தம் காரணமாக ஒரு அவுண்ஸ் தங்கத்திற்கு சுமார் 200 டொலர் சரிவு ஏற்பட்டதனை காணக்கூடிதாக இருந்தது. எனினும் அது தற்காலிக சரிவாக காணப்பட்ட நிலையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டதனை அவதானிக்க முடிந்தது.
இரத்தினக் கற்கள்
தற்போதைய சூழ்நிலையில், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறையுமா என்பதனை தற்போது கூற முடியாது.
இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் தங்க இருப்பினை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமையினால் தங்கத்தின் விலைகள் அதிகரிப்பதற்கு மாத்திரமே அதிக வாய்ப்புகள் உள்ளதென தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகை ஆணையத்தின் இந்திக பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
