உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! கொழும்பில் பதிவாகியுள்ள நிலவரம்
உலக சந்தையில் இன்றைய தினம் (24.04.2023) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1982.72 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் (23.04.2023) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2002 அமெரிக்க டொலர்களாக உலக சந்தையில் பதிவாகியுள்ளது.
கொழும்பு செட்டியார்தெரு நிலவரம்
இதேவேளை கொழும்பு செட்டியார்தெருவில் தங்கத்தின் விலை சிறியளவான ஏற்ற இறக்கங்களுடன் தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் செட்டியார்தெருவில் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 176,000 ரூபாவாக காணப்படுகிறது.
அத்துடன் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 162,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் இம்மாத இறுதி வரை தங்கத்தின் விலை மாற்றமின்றி சிறியளவான ஏற்ற இறக்கங்களுடன் தொடரும் என செட்டியார்தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் அதிகரிக்கும் சாத்தியம்
அத்துடன் மே மாதத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் வாரங்களுக்கு பிறகு தங்கத்தின் விலையானது உலக சந்தையில் அதிகரிக்குமாக இருந்தால் இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2020 டொலர்களுக்கு அதிகமாக உயர்வடைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
அவ்வாறதொரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என இலங்கை தங்க வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.