இலங்கையில் நான்கு இலட்சத்தை எட்டும் தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், உள்ளூர் சந்தையில் 24 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை நான்கு இலட்சம் ரூபாவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.390,000 ஆகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.360,700 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வரலாற்றில் முதல்முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,900 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4900 அமெரிக்க டொலர்களை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,917.65 டொலர்களாக பதிவாகியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தங்க விலை உயர்வு
தற்போதைய புவிசார் அரசியல் அமைதியின்மை மற்றும் அமெரிக்க டொலரின் பலவீனம் ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள் என சொல்லப்படுகிறது.
இது இதுவரை பதிவான அதிகூடிய தங்க விலையாகக் கருதப்படுகிறது. தங்கத்தின் விலைக்கு ஏற்ப, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 96.58 டொலர்களாக உயர்ந்துள்ளதுடன் பிளாட்டினத்தின் விலையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்காலத்தில் விலை அதிகரிப்பு
சந்தை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, எதிர்காலத்தில் தங்கத்தின் விலை 5,000 டொலர்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam