புதிய உச்சம் தொட்ட தங்க விலை! தங்கத்திற்கு கடும் தட்டுப்பாடு - இலங்கையில் நகை வாங்குவோருக்கு ஓர் தகவல்
வரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் தூய தங்கத்தின் விலை இலங்கையில் இரண்டு இலட்சம் ரூபாவாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் குறித்த விலை பதிவாகியுள்ளதாக தங்க வியாபாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இதேவேளை 22 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
இதன் தாக்கம் காரணமாகவே இவ்வாறு தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இலங்கையில் தங்கத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்களுக்கு தேவையாயின் அவர்கள் வழங்கும் தங்கத்தைக் கொண்டு மாத்திரம் தங்க நகைகளை தயாரிக்க முடியும் எனவும் தங்க வர்த்த நிலையத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.