வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டுள்ள தங்கவிலை! மேலும் உயரலாம் என தகவல்
நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நேற்றையதினம்(16) 4 இலட்சத்தை விட இன்றையதினம்(17) மேலும் 10,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதன்படி, இன்றையதினம் கொழும்பு செட்டித் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 410,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 379,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்க விலை
தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,315,481 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 46,410 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 371,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 42,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 340,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 40,610 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 324,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.



