தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் தங்கத்தின் விலையானது ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாவாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகில் பல நாடுகளை கோவிட் தொற்று ஆட்டிப்படைத்து வரும் நிலையில் தொற்று பரவல் ஆரம்பித்ததை தொடர்ந்து தங்கத்தின் விலையிலும் தொடர்ச்சியாக அதிகரிப்பு பதிவாகி வருகிறது.
கோவிட் வைரஸ் பரவலால் சர்வதேச பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை காணப்படுவதுடன் உலகப் பொருளாதாரமும் சரிவைச் சந்தித்து வருகிறது.
இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் முதலீடு செய்து வரும் நிலையில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே இலங்கையில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று மேலும் 3500 ரூபாவால் அதிகரித்து ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாவை எட்டியுள்ளது.
24 கரட் தங்கத்தின் விலை (ஒரு பவுண்) - ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபா
22 கரட் தங்கத்தின் விலை (ஒரு பவுண்) - ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபா
தொடர்புடைய செய்தி
இலங்கையில் தங்கத்திற்கு திடீர் தட்டுப்பாடு

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 17 மணி நேரம் முன்

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
