தங்க முலாம் பூசப்பட்ட T56 துப்பாக்கி: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தங்க முலாம் பூசப்பட்ட T56 துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்கிசை நீதவான் நீதிமன்றினால் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தையில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் வைத்து நேற்று (20) பிற்பகல் ஒரு பெண்ணிடம் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட T56 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.
வெள்ளவத்தை பொலிஸார்
இந்த சம்பவத்தில் துப்பாக்கியை வைத்திருந்த பெண்ணும், மற்றுமொரு வயதான பெண்ணும்(69 வயது) வெள்ளவத்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளில் நேற்று பிற்பகல் வயதான பெண் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
மேலும், வீட்டு வளாகத்தில் இருந்து சந்தேகநபர்களான இரண்டு பெண்களும் பையையும், T56 துப்பாக்கியையும் வெளியே எடுத்துச் செல்வதைக் காட்டும் சிசிரிவி காட்சிகளை வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பிரதான சந்தேககநபர்
இதையடுத்து, பெலவத்தையில் உள்ள பிரதான சந்தேககநபரான பெண்ணின் வீட்டை சோதனை செய்து, அவரையும் துப்பாக்கி இருந்த காரையும் நேற்று இரவு 8:30 மணியளவில் வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கதவுகள் பூட்டப்படாதபோது, அடையாளம் தெரியாத யாரோ ஒருவர் துப்பாக்கியை காருக்குள் வைத்திருக்கலாம் என இரண்டு பெண் சந்தேக நபர்களும் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
