கொழும்பிலுள்ள அரச வங்கியில் பாரிய தங்க மோசடி! விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
கொழும்பில் அரச வங்கி ஒன்றில், போலி நகைகளை அடகு வைத்து 163 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குறித்த வங்கியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இந்திக நிஷாந்த என்ற முகாமையாளரை, அடுத்த மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 26 முறை திட்டமிட்டு இத்தகைய மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.
தங்க நகைகள்
அதற்கமைய, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இந்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, குற்ற புலனாய்வு பிரிவினர் முகாமையாரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வங்கியின் பாதுகாப்பு நடைமுறைகளை மீறி, போலிப் பொருட்களை தங்கமாக அடகு வைத்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெறவும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என அறியவும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.