பெக்கோ சமனின் மனைவியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகள்
குற்றக் குழு உறுப்பினர் எனக்கூறப்படும் 'பெக்கோ சமன்' என்பவரின் மனைவி ஷாதிகா லக்ஷானி என்பவரிடமிருந்து 40 பவுண் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
அவற்றை மதிப்பீட்டிற்காகவும் அறிக்கையைப் பெறவும் தேசிய ரத்தினக் கல் மற்றும் ஆபரண அதிகாரசபையிடம் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
பணச்சலவை குற்றச்சாட்டுகள் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் நீதிவான் மேலும் உத்தரவிட்டார்.
சிஐடி அதிகாரிகள்..
சந்தேக நபர் தற்போது தடுப்பு காவலில் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான 'பெக்கோ சமனின்' மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த அவர், தனது மூன்று வயது மகளுடன் விமான நிலையத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டபோது, அவரிடம் 40 பவுண் மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
இதனிடையே, இன்று நீதிமன்றின் அவர் முன்னிலைபடுத்தப்பட்டபோது, குழந்தையை தன்னுடன் காவலில் வைத்திருக்க விரும்புகிறீர்களா என்று நீதவான் கேட்டபோது, சந்தேக நபர் தனது மகளை தனது தந்தையின் பராமரிப்பில் ஒப்படைக்க விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




