பெண் உப பொலிஸ் பரிசோதகரிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
கம்பஹா மாவட்டம் கிரிந்திவெல பொபிலியவல-ரதாவான வீதியில் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த பெண் உப பொலிஸ் பரிசோதகர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் அறுத்து சென்றுள்ளனர்.
75 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலி
இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை நடந்துள்ளததாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்து.
சம்பவம் குறித்து உப பொலிஸ் பரிசோதகர் கிரிந்திவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பகுதி நேர வகுப்புக்கு சென்றிருந்த மகளை உப பொலிஸ் பரிசோதகர் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.
கிரிந்திவெல பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.