மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்களால் தங்கச்சங்கிலி அறுப்பு
மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண் ஒருவரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் அவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் நேற்று(03) இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள வீதியால் மதுபானசாலைக்கு அருகில் பெண் ஒருவர் அவரது மகளுடன் சம்பவதினமான நேற்று இரவு சுமார் 7 மணியளவில் நடந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவர்களுக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்கள் பெண்ணின் கழுத்திலிருந்த சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கசங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
