வர்த்தகர் ஒருவரை மர்மமான முறையில் கொலை செய்து மண்ணில் புதைத்த கும்பல்
இரத்தினபுரி, கஹவத்தையைச் சேர்ந்த சிறு இரத்தினக்கல் வியாபாரி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் கஹவத்தை நீலகம பகுதியில் உள்ள ஒரு பழைய இரத்தினக்கல் சுரங்கக் குழியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், கஹவத்தையை சேர்ந்த, 61 வயதான வல்பிடகம அனுர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கையடக்க தொலைபேசி பதிவு
28ஆம் திகதி பிற்பகல் முதல் அவர் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் கையடக்க தொலைபேசி பதிவுகளை ஆய்வு செய்ததில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கஹவத்துகந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பழைய சுரங்கக் குழியில் சடலம் புதைக்கப்பட்டிருந்தது.
இரத்தினக்கல் பரிவர்த்தனை தொடர்பான தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸார் விசாரணை
தொழிலதிபர், ஒருவரிடமிருந்து எண்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு இரத்தினக்கல்லை வாங்கியுள்ளார், அதற்காக அவர் ஆரம்பத்தில் முப்பதாயிரம் ரூபாய் செலுத்தியிருந்தார். மீதமுள்ள ஐம்பதாயிரம் ரூபாயை செலுத்தச் சென்றபோது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரத்தினக்கல் வியாபாரி காணாமல் போன பின்னர், கஹவத்த பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீலகம வீதியில் 29ஆம் திகதி அவரது மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டது.
அதே நாளில், அருகிலுள்ள கஹவத்த தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் அவரது கையடக்க தொலைபேசி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து கஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam