நீரில் அடித்துச் செல்லப்பட்டு கதிர்காமக் கந்தனின் அருளினால், தெய்வாதீனமாக உயிர் தப்பினேன் - சசீந்திர ராஜபக்ச
நீரில் அடித்துச் செல்லப்பட்டு தெய்வாதீனமாக தாம் உயிர் பிழைத்ததாக விவசாய ராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில், தாம் டிபென்டர் ரக வாகனத்தில் மெதகம ஒப்பேகொட பும்பார பகுதியில் அமைந்துள்ள பாலமொன்றில் பயணித்த போது வாகனம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், வாகன ஜன்னல் வழியாக தாம் வெளியே வந்து உயிர் தப்பித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான விபத்து ஒன்று ஏற்பட்டு உயிர் பிழைப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என அவர் தெரிவித்துள்ளார்.
கதிர்காம கந்தனின் அருளினாலும், கடந்த காலத்தில் தாம் செய்த நற்காரியங்களினாலும் உயிர் பிழைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் செய்த பாவத்தினால் இவ்வாறான விபத்தில் சிக்கியதாகவும், செய்த நன்மைகளினால் உயிர் பிழைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam