முடிந்தால் எரிவாயு, எரிபொருள் வரிசைகளுக்கு செல்லுங்கள்:அமைச்சர்களுக்கு சவால்
முடிந்தால், எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு வரிசைகளில் மக்கள் நிற்கும் இடங்களுக்கு சென்று மக்களிடம் கருத்துக்களை கேட்டறியுமாறு அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
'வர்த்தமானி அறிவித்தலுக்கு பதிலாக குறுஞ் செய்திகள் மூலம் பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியாளர்களை போல் எந்த ஆட்சியாளர்களையும் நாட்டில் எப்போதும் கண்டதில்லை.
முன்பு நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடக்கும் சம்பவங்களை அறிந்துக்கொள்ள செய்திகளை பார்ப்பதுண்டு. எனினும் தற்போது செய்திகள், செல்லிடப் பேசிகளில் குறுஞ் செய்திகள், வட்ஸ் அப்பில் வரும் செய்திகளை கண்டதும் நாம் அதிர்ச்சியடைகின்றோம்.
ஏன் அவை நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு தொடர்பான செய்திகள். குறுஞ் செய்தியில் பொருட்களில் விலையை அதிகரிக்கும், அரசாங்கத்தின் கட்டுப்பாடு இல்லாத நிலைமை வரலாற்றில் என்றும் இருந்ததில்லை.
வர்த்தமானி அறிவித்தலுக்கு பதிலாக குறுஞ் செய்தி மூலம் பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் யுகத்தை சுதந்திரத்திற்கு பின்னர் நான் பார்த்ததில்லை. அப்படியான வரலாறு உருவாகியுள்ளது.
ஜனாதிபதி நிறுவனங்களில் மேற்பார்வையிட செல்வதை நாம் பார்த்தோம். ஜனாதிபதி பல நிறுவனங்களுக்கு சென்றிருந்தார். அது தவறல்ல. நாட்டின் பிரதானமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மேற்கொள்கின்றனவா இல்லையா என்பதை அறிய ஜனாதிபதி தனது காலத்தை செலவிட்டாரா என்ற கேள்வி உள்ளது.
ஜனாதிபதி இதற்கு பதிலாக சமையல் எரிவாயு, டீசல் போன்றவற்றை கொள்வனவு செய்ய மக்கள் வரிசைகளில் நிற்கும் இடங்களுக்கு சென்று பார்ப்பது நல்லது.
நான் சவால் விடுக்கின்றேன், அரசாங்கத்தின் அமைச்சர்கள் மக்கள் வரிசைகளில் நிற்கும் இந்த இடங்களுக்கு சென்று மக்களிடம் கருத்து கேட்டால், அவர்கள் எப்படி பதிலளிப்பார்கள் என்பதை காணலாம்" எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam