புத்தாண்டில் வண்ணமயமான விளக்குகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள GO HOME GOTA பெயர் பலகை (PHOTOS)
மலர்ந்திருக்கும் புத்தாண்டில் அரசுக்கு எதிராக ஆறாவது நாளாக கொழும்பு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் போது GO HOME GOTA "கோ ஹோம் கோட்டா" என வண்ணமயமான விளக்குகளால் பெயர் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சில நாட்களுக்கு முன்னர், கொட்டும் மழையிலும் காலி முகத்திடலில் தங்கியிருந்த போராட்டக்காரர்களால் புதிய கிராமமொன்று 'கோடகோகம' என பெயர் உருவாக்கப்பட்டது.
தற்போது போராட்டக்காரர்கள் காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் 'கொடகோகம வித்தியாலயம்' என்ற பெயரில் புதிய கல்லூரியை உருவாக்கியுள்ளனர்.
மேலும், ஒரு நாட்டில் புதிய தலைமுறையினரின் கல்வியறிவு மற்றும் அவர்களின் மேம்பட்ட அணுகுமுறைகளுக்கு அடிப்படையை வழங்கும் 'நூலகம்' நேற்று இந்த புதிய கிராமத்தில் திறக்கப்பட்டது.
அனைவரும் அறிவைப் பெற வேண்டுமானால் நூலகத்திற்கு வந்து புத்தகம் படிக்க அனுமதிப்பது இதன் சிறப்பு. அதே சமயம் இந்தப் போராட்டத்திற்கு வரும் ஒவ்வொருவரும் தங்களுக்கு என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு தங்கள் போராட்ட களத்தில் பங்களிக்கலாம் எனவும், இது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.










