வரலாறு காணாத நெருக்கடியில் இலங்கை: ராஜபக்ச அரசுக்கெதிராக கனடாவில் ஒன்று திரண்ட மக்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் பாரியளவில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் மாத்திரம் அல்லாது இலங்கை மக்கள் வாழும் உலக நாடுகளிலும் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் கனடா - மொன்றியலிலும் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அரசுக்கு எதிராக கடும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கனடாவில் இந்த போராட்டத்தை நடத்தியதாக போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன மத பேதமின்றி இந்த போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டதுடன் ராஜபக்ச அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைத்தனர்.
இந்தப் போராட்டம் கனேடிய ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
