எந்த அரசாங்கமும் என் காவி உடையை களைந்ததில்லை: ஞானசார தேரரின் ஆதங்கம்
எந்த ஒரு அரசாங்கமும் தமது காவி உடையை களைந்தது கிடையாது என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் முன்னிலையாகியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் ஆட்சி செய்த எந்த ஒரு அரசாங்கமும் தமது காவி உடையை களையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் உத்தரவின் அடிப்படையில் இந்த காவி உடை களையப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தேசிய சங்க சபை உரிய தீர்மானம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவி உடையை கலைந்தாலும் தாம் ஞானசார தேரர் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்காக சேவைகளை செய்து இவ்வாறான தண்டனைகளை அனுபவிப்பது குறித்து தாம் ஒருபோதும் கவலை அடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் கைவிலங்கிடப்பட்ட நிலையில் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
ரஷ்யாவின் பிளேக் ஆய்வகத்தில் கசிந்த பாக்டீரியா; ஒருவர் உயிரிழப்பு, கண்காணிப்பில் 200 பேர் News Lankasri
விமானம் தரையிறங்கும் துல்லியத்தை 4 மடங்கு உயர்த்திய ரஷ்ய விஞ்ஞானிகள் - புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு News Lankasri