பிழைகள் எங்கும் நடக்கும்..! அட்டமஸ்தான தேரருக்கு ஆதரவாக ஞானசாரதேரர்
சமீபத்தில் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான கடுமையான குற்றச்சாட்டுகள், சமூகத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் எங்கள் மத விவகாரங்களை நாங்களே பார்த்துக் கொள்வோம், இதில் வெளிநபர்கள் தலையிடத் தேவையில்லை என்று கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இவரது குறித்த கருத்துக்கள் தற்போது மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பௌத்த சாசனம் தொடர்பான உள்நாட்டு மற்றும் மத ரீதியான விடயங்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்து தமக்குத் தெளிவான புரிதலும் முதிர்ச்சியும் இருக்கின்றது.
எங்கள் சாசனம் குறித்த விடயங்களை நாங்களே கவனித்துக் கொள்கிறோம். இதற்கென எங்களிடம் முறையான வழிமுறைகள், போயா தினக் கலந்துரையாடல்கள் மற்றும் மகா சங்கத்தினரின் போதனைகள் உள்ளன என்றும் தேரர் குறித்த சர்ச்சையை நியாயப்படுததுவதாக ஞானசார தேரரின் கருத்துக்கள் அமைந்துள்ளன.
இந்த விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி...
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam