அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்,(Government Medical Officers' Association - GMOA) எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
சுகாதார சேவை மற்றும் மருத்துவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தத் தவறியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் 23 ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தொடர்ச்சியாக பணி நிறுத்தம் செய்யப்படும்.அதன் பின்னரே எதிர்வரும் காலங்களில் எடுக்கப்படும் தொழிற் சங்க நடவடிக்கை தொடர்பில் தெளிவுப்படுத்தப்படும்.
கிரீன்லாந்திற்கு படைகளை அனுப்பும் ஜேர்மனி, பிரான்ஸ் - ட்ரம்ப்பிற்கு அழுத்தம் அதிகரிப்பு News Lankasri