மருத்துவர்களின் தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டது
மருத்துவர்களின் தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்கப் போராட்டம் இவ்வாறு கைவிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீா்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பணி நிபந்தனைகள் மற்றும் வைத்தியசாலை முகாமைத்துவம் போன்ற விடயங்கள் குறித்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது.
கோரிக்கைகளுக்கு உரிய தீா்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இன்றைய தினம் காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய அடிப்படையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் போராட்டம் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்தனர்.
அமைச்சருடனான சந்திப்பில் எட்டப்பட்ட சாதாகமான நிலைமையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri