கோட்டாபயவிற்கு நேர்ந்ததே அநுரவிற்கும் நேரும் எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு நேர்ந்ததே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் நேரும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமால் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போரை போன்று மருத்துவர்களுக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையிலான பிரச்சினை நீண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பிரச்சனை நீண்டு செல்வதற்கு சுகாதார அமைச்சர் மற்றும் பிரதி சுகாதார அமைச்சரின் செயல்பாடுகளே காரணம் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சுகாதார அமைச்சருக்கும் பிரதி சுகாதார அமைச்சருக்கும் மருத்துவர்களின் சங்கத்தை தங்களது அரசியல் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் மருத்துவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது என தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் சங்கத்தின் அதிகாரத்தை கைப்பற்றும் முனைப்புகளில் சுகாதார அமைச்சரும் பிரதி சுகாதார அமைச்சரும் ஈடுபட்டுள்ளனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.
ஏனைய தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்தியது போன்று மருத்துவர்களின் தொழிற்சங்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு உண்டு என தெரிவித்துள்ளார்.
சுகாதார மருத்துவர்கள் சங்கம் ஜேவிபியின் தலைமையகமான பலவற்றையினால் கட்டுப்படுத்தக் கூடிய வகையில் மாற்றம் பெற வேண்டும் என்பதே அவர்கள் நோக்கமாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சருக்கும் மருத்துவர்களுக்கும் இடையிலான இந்த பிரச்சனையினால் பாதிக்கப்பட போவது அப்பாவி நோயாளிகள் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதியிடம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் கரிசனைகள் குறித்து ஜனாதிபதி செவிமடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு தலை பட்சமாக ஒரு தரப்பினரின் கருத்துக்களை மட்டும் செவிமடுத்தால் அன்று கோட்டபாய ராஜபக்சவிற்கு நேர்ந்தது தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஏற்படும் என டொக்டர் சமால் சஞ்சீவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.