யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த உலகத் தமிழர் பேரவையினர் (Video)
புதிய இணைப்பு
உலக தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண
மாவட்டத்திற்கு இன்றையதினம் (09.12.2023) விஐயம் செய்தனர்.
இதன்போது மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் நல்லூர் கந்தசுவாமி கோயில்,
நல்லை ஆதீனம், யாழ் ஆயர் இல்லம் போன்ற பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்தனர்.
முதலாம் இணைப்பு
உலகத் தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் இன்று (09.12.2023) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளனர்.
இமயமலைப் பிரகடனம்
இந்தத் தகவலை உலகத் தமிழர் பேரவையின் பணிப்பாளர் பவன் பவகுகன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்கின்றனர்.
இதன்போது நாம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலில் விசேட
வழிபாடுகளில் ஈடுபடவுள்ளோம்.
அதன்பின்னர் நல்லை ஆதீன குருமுதல்வர் மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் ஆகியோரைச் சந்தித்து, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம்,
மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட முக்கிய விடயங்களை உள்ளடக்கிய “இமயமலைப் பிரகடனம்” தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளோம்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
