அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்குவது தவறான நடவடிக்கை
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்குவது தவறான நடவடிக்கை என்று அரசாங்கம் இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
நிதி மற்றும் மூலதன சந்தைகள் மற்றும் பொது நிறுவன சீர்திருத்தங்கள் ராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு இலங்கையின் முன்னாள் அரசாங்கமே வழங்கியது. துறைமுகம் கடன் வலையில் சிக்கியுள்ளதால் அதைக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று முன்னாள் அரசாங்கம் தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு தவறான நடவடிக்கை என்று தற்போதைய அரசாங்கம் உணர்கின்றது என்றும், இது போன்ற கொள்கையை பின்பற்றாது என்றும் கப்ரால் கூறினார்.
கொழும்பு போர்ட் சிட்டி நிலம் இலங்கைக்கு சொந்தமானது என்றும், அதில் ஒரு பகுதி
மட்டுமே சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர்
தெரிவித்தார்