ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் கால அவகாசத்தை வழங்கியுள்ள பிக்கு-விரட்டுவோம் எனவும் எச்சரிக்கை
நாட்டின் தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக மேலும் ஒரு மாத காலத்தை வழங்குவதாக மிகிந்தலை ராஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
மிகிந்தலையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்க வேண்டும்
மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் துரிதமான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டை ஆட்சி செய்யும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு ஒரு மாத கால அவகாசத்தை மாத்திரம் வழங்குகிறோம்.
நாட்டில் வாழும் 220 லட்சம் மக்களை பற்றி சிந்தியுங்கள்.சகல மதத்தினரும், இனங்களும் இணைந்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறே அரசாங்கத்திற்கு கூறுகின்றனர்.
மக்களுக்கு நிவாரணங்களை வழங்காது நீங்கள் தொடர்ந்தும் நாட்டை ஆட்சி செய்தால், எமக்கு உங்களை விரட்ட நேரிடும். ஜனவரி மாதம் புதிய ஆண்டு பிறக்கின்றது. பௌர்ணமி தினமும் வருகின்றது.
நாடாளுமன்றத்திற்கு வந்திருப்பது தேன் நிலவை கழிப்பதற்கு அல்ல
அப்போது பொதுமக்களுக்கு வாழும் உரிமையை கொடுங்கள். நீங்கள் நாடாளுமன்றத்திற்கு வந்திருப்பது தேன் நிலவை கழிப்பதற்காக என நினைத்தால், நீங்கள் தவறியுள்ளீர்கள்.
இதுவரை காலமும் எம்மால் தவறு ஒன்று இழைக்கப்பட்டது. அந்த தவறை சரி செய்யவே நாஙக்ள், ஒரு வழி,ஒரு கொடி, ஒரு சட்டம், ஒரு நாடு என்று ஒன்றாக அணித்திரண்டுள்ளோம். நாடாளுமன்றத்தில் இருக்கும் தலைவர்கள் எவரையும் நாங்கள் பொருட்படுத்துவதில்லை எனவும் தம்மரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
