எரிபொருள் விநியோகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை: ரூபவதி கேதீஸ்வரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி எரிபொருள் பெற்றுக்கொள்வாதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘’கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் இடர்பாடுகள் காணப்படுகின்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை
கிளிநொச்சி மாவட்டத்தில் வசித்து வருகின்ற மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான எரிபொருளினை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்க தேவையில்லை.
மேலும் மாவட்டத்தில் இயங்கும் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தங்களுக்கான எரிபொருளை தற்போதைய நடைமுறைகளை பின்பற்றி சிரமங்களின்றி முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலைய
முகாமையாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri