மேலும் ஐந்தாண்டுகள் ரணிலுக்கு வழங்குங்கள்: அலி சப்ரி வேண்டுகோள்
நாட்டை மீட்டெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வந்துள்ளமை தொடர்பில் சர்வதேச சமூகம் மத்தியில் சிறந்த கௌரவம் காணப்படுகின்றது.
எவரும் எதிர்பாராத வேகத்தில் நாம் அதைச் செய்துள்ளோம். இது பற்றி அறிய பலரும் ஆர்வமாக உள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு இது நடக்குமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகின்றது.
நாட்டை மீட்டெடுத்த தலைவர்தான் ரணில் விக்ரமசிங்க. எனவே, நிலையானதொரு பொருளாதாரத்தை ஏற்படுத்த அவருக்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலே இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கும்.
எனவே, உணர்வு அரசியலுக்குப் பதிலாக வேலைத்திட்டங்கள் உடைய அரசியலுக்கே ஆதரவு வழங்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri