மகிந்தவின் ஓய்வுக்கு முன் பிரதமர் பதவி வேண்டும்! மொட்டுக்கட்சியினர் யோசனை
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் பதவியில் நியமிப்பது சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்று முன்தினம் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதி நேரத்தில் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத பிரசன்ன ரணதுங்க
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் வீட்டில் நடைபெற்ற இந்த விசேட பேச்சுவார்த்தையில், பவித்ரா வன்னியாராச்சி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ச உட்பட மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கலந்துக்கொண்டதாக தெரியவருகிறது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இறுதி நேரத்தில் அவர் கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை.
பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ள போதிலும் அரசாங்கத்திற்குள் தமது கட்சி நெருக்கடி உள்ளாகி இருக்கின்றதே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை என கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறுகிய காலத்திற்கு மகிந்த பிரதமராக நியமிக்கப்பட வேண்டும்
இதற்கு தீர்வாக மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமர் பதவியில் கட்டயாம் நியமிக்க வேண்டும் என கூட்டத்தில் கலந்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.
மகிந்த ராஜபக்சவுக்கு கௌரவமான அரசியல் ஓய்வை வழங்குவதற்காக குறுகிய காலத்திற்கு அவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவுக்கு கௌரவமான ஓய்வை வழங்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதற்கு முன்னர் பகிரங்கமாக கூறியிருந்தார்.
எனினும் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் பதவியில் நியமிக்க வேண்டியது அவசியமில்லை என்பது பிரசன்ன ரணதுங்கவின் நிலைப்பாடாக இருக்கின்றது.
எது எப்படி இருந்த போதிலும் இறுதியில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
