யாழில் முச்சக்கர வண்டி மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு
யாழில் வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் முச்சக்கர வண்டி மோதி உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் - 3ஆம் கட்டை, கட்டைப்பிராயைச் சேர்ந்த குகபாலச்சந்திரன் சின்னத்தங்கச்சி (வயது 68) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
விபத்தில் படுக்காயம்
குறித்த பெண் நேற்று முன்தினம் (19.10.2024) தனது வீட்டுக்கு எதிரே உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டு, பிற்பகல் 6.00 மணியளவில் வீதியை கடந்து தனது வீடு நோக்கி செல்ல முற்பட்டுள்ளார்.

இதன் போது பருத்தித் துறையில் இருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி அவரை மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் படுக்காயம் அடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்திசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri