சுனாமியில் காணாமல் போன மகளை AI தொழில்நுட்பத்தின் மூலம் தேடும் குடும்பம்
சுனாமியில் காணாமல் போன பெண்னை AI தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சுனாமி பேரிடரில், ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்த குடும்பத்தின் இளைய மகள் காணாமல் போயிருந்தார்.
அவரைக் கண்டுபிடிக்கும் வகையில், AI தொழில்நுட்பத்தின் மூலம் அவரது தற்போதைய வடிவத்தை கொண்ட புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சுனாமி பேரிடர்
சுனாமி இடம்பெற்ற தினத்தன்று ஒன்பது பேர் கொண்ட குடும்பத்துடன் 6 வயதான ஹிருணி தருஷிகா என்ற சிறுமி, ஹிக்கடுவவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அனர்த்தத்தின் போது இன்னுமொரு சிறுமி உயிரிழந்த நிலையில், ஹிருணியை கண்டுபிடிக்க முடிவில்லை. அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக குடும்பம் நம்பிக்கை கொண்டுள்ளது.
குடும்பத்தின் கோரிக்கை
இந்நிலையில் ஹிருணியை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் அவரது தாயும் மூத்த சகோதரியும் அவரை கண்டுபிடிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கமைய, தற்போது இவரின் வடிவமாக கருதப்படும் AIதொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.
மகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 0711856162 அல்லது 0112515961 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு, அவரது தாயார் மற்றும் சகோதரி ஆகியோர்
கேட்டுக்கொண்டுள்ளனர்.