வெசாக் அலங்காரத்தில் ஈடுபட்ட சிறுமி மின்சாரம் தாக்கி மரணம்
வெசாக் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் இணைந்து வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் களுத்துறை, மொரகஹஹேன பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
9 வயதுடைய சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மின்சாரம் தாக்கி பலி
உயிரிழந்த சிறுமி வெசாக் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் இணைந்து வீட்டைப் பல வர்ண மின்குமிழ்களால் அலங்கரித்துக் கொண்டிருந்துள்ளார்.
பின்னர் இந்தச் சிறுமி பல வர்ண மின்குமிழ்களுக்கு மின்சாரத்தை வழங்க முயற்சித்தபோது மின்சாரம் தாக்கிக் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சிறுமி பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
