பேஸ்புக் காதலனால் உயிரிழந்த மாணவி - தாய்க்கு அனுப்பிய குறுந்தகவல்
பதுளையில் பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலனை சந்தித்த முதல் நாளே துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதால் மனம் உடைந்த மாணவி உயிரை மாய்த்துள்ளார்.
இது தொடர்பில் நண்பிக்கு அனுப்பிய வட்ஸ்அப் குறுந்தகவல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பதுளை தர்மராஜா மகா வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டு கல்வி கற்கும் நேத்து சாரங்கி என்ற மாணவி அதிகளவு மருந்தை உட்கொண்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வட்ஸ்அப் குறுந்தகவல்
“அம்மா நான் உங்களை மிகவும் அதிகமாக நேசிக்கின்றேன். என்னால் எதுவும் செய்து கொள்ளாதீர்கள் அம்மா. கவனமாக இருங்கள், நீங்கள் எனக்கு ஒரு நல்ல அம்மா. நல்ல அம்மாவுக்கு என்னால் நல்ல மகளாக இருக்க முடியவில்லை, மன்னிக்கவும் அம்மா” என வட்ஸ்அப் குறுந்தகவல் ஒன்றை அனுப்பிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 3ஆம் திகதி தனியார் வகுப்பிற்கு சென்ற மாணவி பதுளையில் உள்ள மலைக்கு முச்சக்கரவண்டியில் சென்ற நிலையில், பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலனை முதல் முறையாக சந்தித்துள்ளார்.
அங்கு அந்த இளைஞன் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸ் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காதலன் கைது
மாலை வீடு திரும்பிய மாணவி பாட்டியின் உயர் இரத்த அழுத்த மருந்தை அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில், பதுளையைச் சேர்ந்த 23 வயதுடைய அவரது காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
you may like this