மாத்தறையில் லொறி மோதி பெண் பரிதாப மரணம்!
மாத்தறை - ஹக்மன வீதியின் துடாவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(13.3.2026) இடம்பெற்றுள்ளது.
வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த பெண் பாதசாரி மீது, மாத்தறை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று மோதியதிலேயே விபத்து நேர்ந்துள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் பலத்த காயமடைந்த மேற்படி பெண், உடனடியாக மாத்தறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் விவரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி மாத்தறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 19 மணி நேரம் முன்
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri