கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதி யுவதி உயிரிழப்பு
கந்தளாய் (Kantale ) பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (21.4.2024) காலை ரஜஎல வீதியின் கிளை வீதியில் இடம்பெற்றுள்ளது.
கந்தளாய் - ரஜஎல பிரதேசத்தில் வசித்து வந்த 19 வயதுடைய யுவதியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய, வருகையில், கிளை வீதியில் பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி யுவதி மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த யுவதி கந்தளாய் வைத்தியசாலையில் (Kandalai Hospital) அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், விபத்தின் பின்னர் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் (Kandalai police) மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam