நானுஓயாவில் சிறுமியொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய சந்தேக நபருக்கு விளக்கமறியல்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழமலை தோட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சந்தேக நபரை நேற்று (19.06.2024) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணை
இதன்போது கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனவும் பாதிக்கப்பட்ட சிறுமியை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை அனுமதித்துள்ளதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தனது வீட்டில் சிறிய வர்த்தக நிலையம் ஒன்று நடத்தி வருவதாகவும் சிறுமி வர்த்தக நிலையத்திற்கு வந்த போது சிறுமியை அழைத்துச் சென்று தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த சிறுமி கடந்த 17 ஆம் திகதி திடீர் சுகயீனம் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனையடுத்து மாணவி கர்ப்பமடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாணவியின் சட்ட வைத்திய விசாரணையை தொடர்ந்து வர்த்தக நிலைய உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம்(18) பொலிஸார் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri