கட்டுநாயக்க விமான நிலையத்தில் யுவதி கைது
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்படாத முகவரகத்தின் ஊடாக கட்டாரில் வீட்டுப் பணிப் பெண்ணாக சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த யுவதியே கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டாரில் 21 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்களை மட்டுமே வீட்டு சேவைக்கு பரிந்துரைக்க முடியும். ஆனால் மோசடியான முறையில் கட்டாருக்கு செல்ல முயற்சித்த யுவதி மொரட்டுவையில் வசிக்கும் 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையம்
நேற்று காலை 10.30 மணியளவில் டோஹா நோக்கிப் புறப்படும் Qatar Airways விமானமான QR-665 இல் ஏறுவதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இந்த விமானத்தில் பயணிப்பதற்கு தேவையான அனுமதியை முடித்துவிட்டு ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு குடிவரவு கவுண்டருக்கு வந்துள்ளார்.
கத்தாரில் பணிபுரிய விசா பெற்றிருந்தாலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் அந்தப் பணிக்கான பதிவு, அந்நாட்டு வேலைவாய்ப்பு முகவருடன் செய்துகொள்ளப்பட்ட வேலைவாய்ப்பு ஒப்பந்தம், பயிற்சி சான்றிதழ் ஆகியவை இல்லாததால் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
யுவதி கைது
பின்னர், இந்த யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் வந்ததாகவும் யுவதிக்கு 21,500 ரூபா வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த யுவதி வேலைக்காக புறப்படுவதற்காக விமான நிலையத்தின் புறப்படும் முனையத்திற்குள் பிரவேசித்த போது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளிடம் சிக்கவில்லை.
கைது செய்யப்பட்ட யுவதி மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
you may like this video