முல்லைத்தீவில் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி : கணவன் கைது
முல்லைத்தீவு (Mullaitivu) புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விசுவமடு பகுதியினை சேர்ந்த 15 அகவையுடைய சிறுமியினை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளத்தினை சேர்ந்த 24 அவையுடைய கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (10.06.2024) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை
விசுவமடு தொட்டியடி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவியாக இருந்த 15 வயதுடைய சிறுமியை காதலித்து வீட்டை விட்டு கூட்டிச்சென்ற சுதந்திரபுரத்தினை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பொலிஸார் தேடிவந்த நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குறித்த சிறுமியை யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி,கிளிநொச்சி போன்ற பகுதிகளில் உறவினர்களின் வீடுகளில் தங்கி நின்று பின் தனது இடமான வெள்ளப்பள்ளத்திற்கு சிறுமியினை வீட்டிற்கு கூட்டிவந்துள்ளார். சிறுமி நான்குமாத கர்ப்பம் தரித்த நிலையில் காணப்பட்டுள்ளமையினால் புதுக்குடியிருப்பு பொலிஸார் 24 வயதுயுடைய கணவனை கைது செய்துள்ளார்கள்.
இந்நிலையில், சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சிறுமியின் கணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam