பெண்ணொருவருக்கு நேர்ந்த விபரீதம்: நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்த கடுமையான உத்தரவு
வவுனியா – நெளுக்குளத்தில் 2011 ஆம் ஆண்டில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் இருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் குற்றவாளிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை
குறித்த வழக்கின் குற்றவாளிகளுக்கு தலா 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும், தலா 05 இலட்சம் ரூபா நட்ட ஈடும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நட்ட ஈட்டை செலுத்தத் தவறும் பட்சத்தில், மேலும் 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இரண்டு குற்றவாளிகளுக்கும் 5000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நெளுக்குளத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் பெண் ஒருவரை ஏற்றிச்சென்ற இருவர் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளனர்.
பிடியாணை உத்தரவு பிறப்பிப்பு
அதற்கமைய, இரண்டு பிரதிவாதிகளையும் குற்றவாளிகள் என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
குற்றம்சாட்டப்பட்ட இரண்டு குற்றவாளிகளில் ஒருவர் மாத்திரமே இன்று மன்றில் முன்னிலையாகியிருந்ததுடன், அவருக்கான தண்டனை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கின் மற்றைய குற்றவாளி இந்தியாவில் தலைமறைவாகியுள்ளதால், அவரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை பிறப்பித்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri