முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கேட்டுள்ள பரிசு
தற்போதிருப்பதை போன்று மோசமான நிலைமைக்கு நாட்டை கொண்டு செல்லாமைக்கு நீங்கள் எனக்கு பரிசு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பெல்மடுல்ல பகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில், நாம் கூறும் விடயங்களுக்கு அரசாங்கம் கோபமடைய வேண்டிய அவசியம் இல்லை. நாம் உண்மையை பேசுகின்றோம்.
பிள்ளைக்கு பூசுவதற்கு சவர்க்காரம் இன்மையினால் அதனைப் பெற்றுக் கொள்ளச் சென்ற அப்பாவி ஒருவர் மீது மோசமான தாக்குதல் நடத்தியிருந்தனர்.
ஐந்து வருடங்களுக்கு ஒன்றரை மாதம் குறைவான காலப் பகுதியே நான் ஜனாதிபதியாக இருந்தேன். சாப்பிட முடியாமல், கேஸ் பிரச்சினை, உரப் பிரச்சினை இவை அனைத்தும் மக்கள் ஏற்படுத்தியிருந்த பிரச்சினை அல்ல. இவை அனைத்தும் அரசாங்கம் உருவாக்கிக் கொண்ட பிரச்சினைகள்.
இந்த இரண்டு வருடங்களில் மக்களால் அரசாங்கத்திற்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை, கட்சிகளாலும் பிரச்சினைகள் ஏற்படவில்லை. இவை அனைத்தும் அரசாங்கம் உருவாக்கிக் கொண்ட பிரச்சினைகள்.
எது எவ்வாறாயினும் சுதந்திர கட்சியின் தலைமையில் புதிய அரசாங்கத்தை உருவாக்குவத்கான திட்டத்தினை முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாம் தரப்பு தலையிடக்கூடாது! - மகிந்தவிடம் சீனா முன்வைத்த கோரிக்கை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri