நள்ளிரவில் திடீரென உட்புகுந்த இராட்சத முதலை : மடக்கிப்பிடித்த மக்கள்
மட்டக்களப்பு (Batticaloa) தாழங்குடா மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவு நேரத்தில் திடீரென உட்புகுந்த இராட்சத முதலையை மடக்கிப்பிடித்த சம்பவம் ஒன்று பதிவாகியு்ளளது.
குறித்த பகுதிக்குள் இன்று(03.05.2025) அதிகாலை 3.00 மணியளவில் திடீரென புகுந்த முதலையை கண்டு அச்சமடைந்த நிலையில் கடும் போராட்டத்திற்கு மத்தியில் முதலையை மடக்கி பிடித்து கட்டி வைத்துள்ளனர்.
கடும் போராட்டத்திற்கு மத்தியில்
கடந்த ஓரிரு தினங்களாக பெய்த மழை காரணமாக மட்டக்களப்பில் உள்ள வாவிகள் மற்றும் குளங்களில் நீர் நிறைந்து காணப்படுவதனால் அவற்றிலிருந்து முதலைகள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உள் நுழையும் நிலை அதிகமாக காணப்படுகின்றது.
இந்நிலையில், கிராம மக்களால் மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்ததை அடுத்து அவர்களும் வருகை தந்து கட்டி வைத்திருந்த முதலையை கடும் போராட்டத்திற்கு பிடித்து பாதுகாப்பாக மீட்டு மனித நடமாட்டம் அற்ற நீர்நிலையில் முதலையை விடுவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
