வெளிநாடொன்றில் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்து! முக்கிய அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலி
மேற்கு ஆபிரிக்க நாடான கானாவில் ஏற்பட்ட உலங்குவானூர்தி விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் இருவர் உட்பட 8 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து, இன்று (6) காலை 9.12 மணியளவில் (உள்ளூர் நேரப்படி), அந்நாட்டின் அஷாந்தி மாகாணத்தில் உள்ள ஒபுவாசி நகரத்துக்கு, இராணுவ உலங்குவானூர்தி ஒன்று புறப்பட்டுள்ளது.
8 பேர் பலி
இந்த உலங்குவானூர்தியில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் 2 பேர் உட்பட 8 பேர் பயணித்ததாகக் கூறப்படும் நிலையில், புறப்பட்ட சில நிமிடங்களில், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள வனப்பகுதியில், அந்த உலங்குவானூர்தி கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், கானாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் எட்வார்ட் ஒமானே பொவாமா, சுற்றுச்சூழல் அமைச்சர் அல்ஹாஜி முர்தாலா முஹமது உள்பட அந்த உலங்குவானூர்தியில் பயணித்த 8 பேரும் பலியானதாக, அந்நாட்டு அரசின் செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam