முழு நாட்டு மக்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரே நாங்கள் பெற்றுக்கொள்வோம் - ஜே.வி.பி
முழு நாட்டு மக்களுக்கும் வழங்கப்பட்ட பின்னரே தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படுவது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினர், ஆசிரியர்கள் உட்பட மக்களுடன் தினமும் சந்திப்புகளை நடத்தும் நபர்களே பிரதானமாக நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்ல.
இதனால், முழு நாட்டு மக்களுக்கும் முதலில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.



