விண்வெளியில் திருமணம்: வியக்கவைக்கும் அமெரிக்காவின் புதிய திட்டம்
விண்வெளியில் திருமணம் செய்யும் சேவையை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் (Space Perspective) என்ற நிறுவனம் தற்போது ஆரத்பித்துள்ளது.
இதற்கு கட்டணமாக 125,000 அமெரிக்க டொலர் (இலங்கை ரூபா மதிப்பில் சுமார் 4 கோடி) வசூலிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம் ஒரு படி மேலே சென்று விண்வெளியில் திருமணம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் பதிவு
இது குறித்து ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேன் பாய்ண்டர் தெரிவித்துள்ளதாவது,
கார்பன் நியூட்ரல் பலூன்களில் இணைக்கப்பட்ட பிரத்தியேக கேப்ஸ்யூல்களில் தம்பதிகள் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்படும்.
இதற்குக் கட்டணமாகக் 125,000 அமெரிக்க டொலர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள இத்திட்டத்தில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கானோர் இப்போதே முண்டியடித்துக் கொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
தம்பதிகளின் பாதுகாப்பு
இந்த நெப்டியூன் கேப்ஸ்யூல்கள் விண்வெளியின் அழகை தம்பதிகள் கண்டு ரசிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கேப்ஸ்யூல்கள் தம்பதிகளின் பாதுகாப்புக்காக மணிக்கு 19 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்கும்.
மேலும், இந்த கேப்ஸ்யூல்களில் இணைக்கப்பட்டிருக்கும் கார்பன் நியூட்ரல் பலூன்கள் புதுப்பிக்கத்தக்க ஹைட்ரஜனில் இயங்கக் கூடியவை என்பதால் அவை சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானவை என்றும் ஜேன் பாய்ண்டர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
