இலங்கையில் இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்த மேற்கத்திய நாடுகள் ஆதரவு
இயற்கை விவசாயத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்த ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் தமது ஆதரவை வழங்க உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்று மாலை அமைச்சரவைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த நாடுகள் இதனை இலங்கையில் வெற்றி செயற்பாடாக மாற்ற ஆர்வமாக உள்ளன என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த நிலையில் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட விவசாயிகளின் போராட்டங்கள் நாட்டில் இடம்பெறுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
நடப்பு பருவத்திற்கான பசளைகளின் பற்றாக்குறை குறித்து எந்தவொரு பிரச்சினையிலும் தீர்வுகளை காணுமாறு அமைச்சர்களை அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை இயற்கை விவசாயத்தை அறிமுகம் செய்வதற்கான தனது முடிவை மாற்றியமைக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 15 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
