ஹிட்லர் தொடர்பிலான கருத்துக்கு ஜெர்மனிய தூதரகம் அதிருப்தி
சர்வாதிகாரி ஹிட்லரை தொடர்புப்படுத்தி இலங்கை அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கு ஜெர்மனிய தூதரகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான ஜெர்மனிய தூதுவர் ஹொல்கர் சியுபர்ட் அதிருப்தியை வெளியிட்டு டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.
சர்வாதிகாரி ஹிட்லரைப் போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் ஆட்சி செய்ய வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என அமைச்சர் திலும் அமுனுகம கண்டியில் கருத்து வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதி ஹிட்லரைப் போன்று சர்வாதிகார அடிப்படையில் செயற்பட வேண்டுமென இந்த நாட்டின் 69 லட்சம் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து குறித்து ஜெர்மனிய தூதுவர் ஹொல்கர் அதிருப்தி வெளியிட்டு கருத்து வெளியிட்டுள்ளார்.
மில்லியன் கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு ஹிட்லரே பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடோல்ப் ஹிட்லரை எந்தவொரு அரசியல்வாதியும் முன்மாதிரியாகக் கொள்ளக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam