வெளிநாட்டிலுள்ள இலங்கையருக்கு சொந்தமான கொழும்பு வீட்டில் காதலர்களின் கைவரிசை
கொழும்பில் வெளிநாட்டில் வசிக்கும் ஆயுர்வேத மருத்துவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த காதலர்களால் பாரிய கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் மதிப்புமிக்க மின் சாதனங்கள் உட்பட 1.3 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களையும் 4.5 மில்லியன் ரூபாய் பணத்தையும் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தத் திருட்டுக் குறித்து தெஹிவளை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காதலர்களின் கைவரிசை
தீவிர தேடுதலுக்கு பின்னர் கொள்ளையில் ஈடுபட்ட 24 மற்றும் 22 வயதுடைய காதலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியிலுள்ள பச்சை குத்தும் மையத்தில் தங்கியிருந்த போது கடந்த 22ஆம் திகதி தெஹிவளை பொலிஸாரால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.