உக்ரைனுக்கு ஆதரவளித்து ஜேர்மனி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுள்ள இலட்சக்கணக்கான மக்கள் (VIDEO)
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகள் பல தடைகளை விதித்து உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கும் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்ற மோதலில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த பல ஐரோப்பிய நாடுகள் இராணுவ உதவி வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், ஜேர்மன் நாடாளுமன்றத்தில் விசேட அமர்வு நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜேர்மனியின் தலைநகரான பேர்லினில் பாரிய மக்கள் அணி திரண்டுள்ளனர்.
இதன்போது உக்ரைனில் நடக்கும் போருக்கு எதிராக பேர்லினில் 500000 பேர் வரை ஒன்று கூடி ரஷ்யாவிற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.
Danke an die 500 000 Menschen, die heute mit uns und einem breiten Bündnis für den #Frieden auf der Straße sind! Danke an die Zivilgesellschaft, die laut und deutlich fordert: We want peace, not war! #StopWar #Berlin pic.twitter.com/ug9LW2oAZA
— Martin Kaiser (@martinkaisergp) February 27, 2022